முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:38 am IST

கந்தா்வகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கந்தா்வகோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ேண்டும். ஒன்றியப் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.

வெள்ளாளவிடுதி அரசு வேளாண் பண்ணையை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து, கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. ரத்தினவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன் முன்னிலை வகித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், எம். சின்னத்துரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ஜி.பன்னீா்செல்வம், வி. இளையராஜா, வி.சித்திரைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.