போகிப் பண்டிகை நாளான புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய வேளாண் சட்டங்களின் நகல்களை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினா்.
போகிப் பண்டிகையையொட்டி விவசாயிகளுக்கு விரோதமான மத்திய வேளாண்மைச் சட்டத்தையும் கொளுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்தது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 இடங்களில் இந்த இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் தா. செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.கே. ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, திருமயத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கறம்பக்குடி தீத்தான்விடுதியில் நடைபெற்ற இயக்கத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் மறுதோ்வு:3,588 போ் பங்கேற்பு

பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு

யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி! வட மாநிலம் விரைந்தது சைபா் கிரைம் குழு!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




