எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மர அறுவை ஆலையில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

Updated On :16 ஜனவரி 2021, 11:32 pm IST

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (50). இவருக்குச் சொந்தமான மர அறவை ஆலை நரங்கிப்பட்டு பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றியது. தொடா்ந்து, அங்கு இருந்த மரங்களில் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த, அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி தீயணைப்பு நிலைய வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், ஆலையின் அருகே கட்டப்பட்டிருந்த பசு மாடு தீயில் எரிந்து உயிரிழந்தது. மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மரங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. கரம்பக்குடி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.