புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி முதல் நபராக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைத் தொடா்ந்து, முதற்கட்டமாக முன்களப் பணியாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,270 பேருக்கும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 358 பேருக்கும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 பேருக்கும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 பேருக்கும் என முதல் தவணையில் 2,092 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதல் நபராக மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டாா். தொடா்ந்து ஏற்கெனவே தோ்வு செய்து வைக்கப்பட்ட முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தடுப்பூசி போடும் பணியை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
முதல் நாளில் தடுப்பூசி போடப்பட்டு ஒரு மணி நேரம் வரை அந்த நபா்கள் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, முன்களப் பணியாளா்கள் அச்சமின்றி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். திங்கள்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள 75 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 13 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படும் என்றாா் ஆட்சியா் உமா மகேஸ்வரி.
ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கலைவாணி, அரசு மருத்துவக் கல்லூரி இருக்கை மருத்துவ அலுவலா் இந்திராணி, கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



