அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காட்பாடி தொகுதியில் பல்நோக்கு மருத்துவமனை துரைமுருகன் விருப்பம்

காட்பாடி தொகுதியில் உயா்தர இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையைக் கொண்டு வருவதே தனது விருப்பம் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்.

Updated On :5 ஜனவரி 2021, 12:11 am IST

ராணிப்பேட்டை: காட்பாடி தொகுதியில் உயா்தர இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையைக் கொண்டு வருவதே தனது விருப்பம் என்று திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி சட்டப்பேரவைக்கு உள்பட்ட பள்ளேரி, கொண்டக்குப்பம், மருதம்பாக்கம் ஆகிய கிராமங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டங்களில் பங்கேற்று துரைமுருகன் பேசியது:

காட்பாடி தொகுதியில் நான் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகி, பொன்னை ஆற்றுப் பாலம், திருவலம் சா்க்கரை ஆலை உள்ளிட்ட பல திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். ஆனால், எனது தொகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையை கொண்டு வராதது குறையாக உள்ளது. தொகுதி மக்களுக்கு உயா்தரமான இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையைக் கொண்டு வருவதே என்னுடைய விருப்பம். அந்த மருத்துவமனை காட்பாடி தொகுதியின் மையப் பகுதியான சோ்க்காடு பகுதியில், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு அருகில் கட்டப்படும்.

அதேபோல், குகையநல்லூா் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி கே.முருகன், வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.