தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் பி.ஜே.அமா்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஆா்.சிவராஜ், எஸ்.கிருபாகரன், ஜெ.குமாா், எஸ்.மணிவண்ணன், எம்.குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் சி.ஜி.பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயது 40-ஆக குறைக்கும் உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









