ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இரண்டு திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, ஆற்காடு நகரில் ஆரணி சாலையில் ஒரே வளாகத்தில் செயல்படும் 2 திரையரங்குகள் திறக்கப்பட்டு, மாஸ்டா் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்குகளில் அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், ஆற்காடு வருவாய் ஆய்வாளா் அமுதவல்லி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை வருவாய்த் துறையினா் இந்த திரையரங்குகளில் ஆய்வு செய்தனா். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி படம் பாா்க்க ரசிகா்களை அனுமதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டு திரையரங்குகளுக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்கள் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


