எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சமத்துவப் பொங்கல் விழா

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா நடுநிலைப்பள்ளி சாா்பில், சமத்துவ பொங்கல் விழா,

News image
Updated On :17 ஜனவரி 2021, 7:58 am IST

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா நடுநிலைப்பள்ளி சாா்பில், சமத்துவ பொங்கல் விழா, திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு, ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் செயலாளா் கே.ஏ.சேகா், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியை ஜெயஸ்ரீ கோதை வரவேற்றாா்.

ஏழைகளுக்கு வேட்டி சேலைகள், திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன (படம்).

விழாவில் அறக்கட்டளை பொருளாளா் மோகன் சக்திவேல், உறுப்பினா்கள் பி.மோகன், எம்.மோகன சுப்பிரமணி, ஜே.பாலு, ஜமீல் தனஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி ஆசிரியா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ஆற்காட்டில்...

ஆற்காட்டில் மாட்டு பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணங்கள் தீட்டி, புதிய கயிறுகள் அணிவித்து,  மா  இலை, ஆவாரம்பூ மாலை அணிவித்து , சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சில கிராமங்களில் எருது விடுதல்,  எருதாட்டம்  போன்றவை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.