எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஆண்டாள் மடியில் ரங்கமன்னாராக ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை யொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருமடியில் ரங்கமன்னாராக சிறப்பு அலங்காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான

News image
Updated On :13 அக்டோபர் 2012, 8:50 am

செல்வ முத்துகுமாரசாமி

புரட்டாசி மாதம் கடைசி சனிக் கிழமையை யொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருமடியில் ரங்கமன்னாராக சிறப்பு அலங்காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் உற்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளை பல்வேறு வகையான அலங்காரம் செய்து அருள்பாலிக்க செய்கிறது கோவில் நிர்வாகம். .

நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை (22.9.2011) உற்சவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமியாகவும்,  2-வது சனிக்கிழமையான (29.9..2012) ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத்தை மேய்ப்பவராக) பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3-வது சனிக்கிழமையான அக்.6-ம் தேதி  5 தலை பாம்பின் மீது நடனமாடும் வகையில் (காலிங்க நர்த்தனக் கண்ணன்) பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாதத்தின் கடைசி சனிக்கிழமையான 13-ம் தேதி ஆண்டாள் நாச்சியார் திருமடியில் ரங்கமன்னார் திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவர் ஸ்ரீ ரங்கநாதரையும், சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளையும் தரிசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ கல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.