எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார்

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொலு தர்பாரை பார்த்துச் செல்கின்றனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 12:11 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொலு தர்பாரை பார்த்துச் செல்கின்றனர்.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் அமைத்துள்ளது.

கொலு தர்பாரை சீர்மன்னு கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பக்தர்கள் பார்வைக்கு தொடங்கிவைத்து பக்தர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் எஸ்.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொலு தர்பாரில் தனியாக ஸ்ரீ தியாகராஜசுவாமியும்,  சிவபெருமான் கைலாயத்தில் காட்சியளிப்பதுபோன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  அக்.24-ம் தேதி வரை கொலு தர்பார் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். தினமும் இன்னிசை நிகழ்ச்சியும், சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலு தர்பார் அமைப்பு மற்றும் நவராத்திரி தினசரி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகளான அ.பாலசுப்பிரமணியன், தெ.மரகதவேல், வா.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.