எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

38 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோவிலுக்கு 38 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.,28ம் தேதி குடமுழுக்கு செய்யப்படுகிறது.

News image
Updated On :26 அக்டோபர் 2012, 11:00 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோவிலுக்கு 38 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.,28ம் தேதி குடமுழுக்கு செய்யப்படுகிறது.

புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காரைக்கால் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி உடனமர் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலை சேர்ந்த, பாரதியார் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோவில் கடந்த 2 ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இக்கோவில் பகுதியில் தனித்தனியே அமைந்திருக்கும் ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ சொக்கநாதர், ஸ்ரீ பந்தமாணிக்கம் விமானங்களும் புனரமைப்பு செய்யப்பட்டது. ஏறக்குறைய ரூ.60 லட்சம் செலவில் ஒட்டுமொத்த கோவிலும் புனரமைத்து, விமானங்களில் ஏராளமான சுதைகள் பொருத்தப்பட்டு குடமுழுக்குக்கு தயார்படுத்தப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.  கோவில் அருகே கடந்த 21ம் தேதி, விக்னேஸ்வரபூஜையுடன் பூஜைகள் தொடங்கின. நேற்று மாலை முதல் கால யாகபூஜையும், இன்று பகல் 12 மணியளவில் 2-ம் கால பூஜையும், மாலை 3-ம் கால பூஜை மகா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற்றது.

நாளை காலை, மாலை இரு கால பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 6-ம் கால பூஜையும் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்களும் புதுவை முதல்வர், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இக்கோவிலுக்கு 1974-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் குடமுழுக்கு இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.