எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆநிரைத் தலைவனாக காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்)  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2012, 8:54 am

செல்வ முத்துகுமாரசாமி

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்)  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைணவத் திருத்தலமான சிறப்பு மிக்க காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்ஸவர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் உற்ஸவருக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்து வழிபடுவர்.

இந்தப் புரட்டாசி முதல் சனிக்கிழமை (22.9.2011) ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமியாக அருள்பாலித்தார். 2-வது சனிக்கிழமையான (29.9..2012) ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத்தை மேய்ப்பவராக) பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்ஸவரையும், மூலவரையும் வழிபாட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.