வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருத்தணி கோயிலில் மயான சூறை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான சூறை மற்றும் அம்மன் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2013, 12:47 am IST

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான சூறை மற்றும் அம்மன் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருத்தணி பழைய பஜார் தெருவில் ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான சூறை பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் மயான பிரமோற்சவ விழா தொடங்கியது.  இதைத்தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிங்க வாகனத்தில் எழுந்தருளினார்.

பிற்பகல் 3 மணிக்கு மயான சூறை நடைபெற்றது. பழைய பஜார் தெரு, பெரிய தெரு, ஆறுமுக சுவாமி கோயில் தெரு வழியாக நந்தி ஆற்றை அம்மன் அடைந்தது. அப்போது ஆற்றில் கூடியிருந்த பக்தர்கள் அம்மன் மீது சுண்டல், கொழுகட்டை ஆகியவற்றை வீசி வழிபட்டனர்.  பின்னர் பெண்கள் தேங்காய் உடைத்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.