வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மேல்மலையனூரில் மயானக் கொள்ளை விழா

செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை

News image
Updated On :12 மார்ச் 2013, 12:48 am IST

செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

10 நாள் நடைபெறும் மாசிப்பெருவிழா, மஹாசிவராத்திரி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திங்கள்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் கொண்டுவந்த சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பண்டங்கள் மற்றும் தானியங்கள் சங்கராபரணி நதிக்கரையில் உள்ள மயானத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தது.

அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கோயிலில் இருந்து ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக மயானத்தை வந்தடைந்தார். அங்கு குவிக்கப்பட்டிருந்த சுண்டல் மற்றும் கொழுக்கட்டை உள்ளிட்ட தானியங்களை வாரி அம்மன் மீது பக்தர்கள் தூவினர். பின்னர் போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்கள் தானியங்களை எடுத்துச்சென்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வியாழக்கிழமை தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.