சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடை

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 4:49 am IST

காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கருடசேவை உற்சவம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை கருடசேவையை முன்னிட்டு, கருட வாகனத்தில் ஸ்ரீசுந்தரகோபாலப் பெருமாள் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது. 25-ம் தேதி தேர் திருவிழாவும், 28-ம் தேதி தெப்போற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடைகிறது.

இந்து சமய அறநிலையத் துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.