ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் பூச்சொறிதல் ரத ஊர்வலம்

பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசிமாதம் தோறும் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு

News image
Updated On :4 மார்ச் 2015, 10:07 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொறிதல் ரத ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசிமாதம் தோறும் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இத்திருவிழாவின் போது பழனி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு 40ம் ஆண்டு நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. ரதத்தில் அருள்மிகு மாரியம்மனுடன் அருள்மிகு அன்னபூரணி அம்மன் வீற்றிருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டும், பழவகைகளால் தோரணம் அமைக்கப்பட்டும், எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டு ரதம் மின்னொளியில் உலா வந்ததை பலரும் பார்த்து பரவசமடைந்தனர்.  பல இடங்களிலும் பக்தர்கள் பழங்கள், பூக்கள் கொடுத்து ஊர்வலத்தை வரவேற்றனர்.  பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

பழனி ஸ்ரீகந்தவிலாஸ் செல்வக்குமார், ஹோட்டல் கண்பத் இயக்குனர் ஹரிஹரமுத்து ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலத்தின் முன்பாக செண்டைமேளத்துடன் ஸ்ரீவீரஹனுமான், ஸ்ரீமாரியம்மனின் விஸ்வரூப காட்சிகள் ரதத்தில் சுவாமி விசுவரூபமாக 20 அடி உயரத்துக்கும் மேலே எழும்பி நின்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.   புதன்கிழமை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அலங்கார ரத ஊர்வலமும் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் அறுசுவை அன்னதானம் நடைபெறுகிறது. 

நிறைவுநாள் நிகழ்ச்சியாக மார்ச்.14ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  திரைப்பட நட்சத்திரங்கள் நடிகர் செந்தில், திரைப்பட பாடகர் கானாபால், பாடகி வினைதா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.  விழா ஏற்பாடுகளை வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாக கமிட்டி தலைவர் ரத்தினம்,  தலைவர் மூர்த்தி,  துணைத் தலைவர் தேரடி பாலு, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மதனம், பத்மினி முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.