வடபத்ர சயனர் கோவில் மஹாசம்ப்ரோக்ஷணம்: ஜியர் சுவாமிகள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு வடபத்ரசயனர் திருகோவிலில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் 18-ம் தேதி...


ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு வடபத்ரசயனர் திருகோவிலில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் 18-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குவதையொட்டி, சனிக்கிழமை நாங்குனேரி வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த ஜீயர் சுவாமிகளுக்கு தக்கார் கி.ரவிச்சந்திரன் தலைமையில் பட்டர்கள் மரியாதை செய்து வரவேற்றனர். மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறும் இடம் மற்றும் பணிகளை சுவாமிகள் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆண்டாள் சன்னதியில் உள்ள மடத்தில் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
ஸ்ரீநாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் தலைவரும், ராம்கோ தொழில் குழுமத்தின் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, ஜீயர் சுவாமிகள் நேரில் சந்தித்து மஹாசம்ப்ஹோக்ஷணப் பணிகள் குறித்து விளக்கினார். அப்போது தக்கார் கி.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...