ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா சரணகோஷத்துடன் நடைபெற்றது.  

News image
Updated On :21 மே 2016, 7:24 am

சி. உதயகுமார்

விராலிமலை: விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா சரணகோஷத்துடன் நடைபெற்றது.  

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா இக்கோயிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்,  நிகழாண்டுக்காண விழா கடந்த மே, 13-ம் தேதி மலைக்கோயில் மேல் உள்ள சுப்பிரமணியர் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனைதொடர்ந்து தினமும் சுவாமி காலை, மாலை வேளைகளில் மயில், பூதம், நாகம், சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் ரதாரோகணம் எனும் திருத்தேரோட்ட தேர்வடம் பிடிப்பு நிகழ்வு சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சமேதகராக தேரில் எழுந்தருளினார். அதனைதொடர்ந்து 10.45 மணிக்கு கோட்டாட்சியர் ஆர். டெய்சிகுமார், வட்டாட்சியர் ஆர். சுவாமிநாதன்,விராலிமலை ஒன்றியக்குழுத்தலைவர் மு. சுப்பையா, ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி, ஒன்றியக்குழுத் தலைவர் ஆ. பெரியசாமி, மணிமாலாசெந்தில்,ஊராட்சி மன்றத்தலைவர் லீலாவதிகணேசன்(விராலிமலை) சி. மணிவண்ணன்(வடுகப்பட்டி) பி. முருகேசன்(பூதகுடி)சகுந்தலாசந்தானம்(வேலூர்) தொழிலதிபர் ஆர். கே. சிவசாமி,வர்த்தகசங்கத் தலைவர் ஆர். ராமசந்திரன்,  கூட்டுறவு சங்க இயக்குநர் ஜெ. ஆர். அய்யப்பன், வெல்கம்மோகன், எம்.முரளிதரன், சி. தீபண், அண்ணா தெழிற்சங்கம் பி. சரவணன், அபூர்வாபாஸ்கர் உள்ளிட்டோர் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

 பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திருத்தேர் விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சரியாக 12.05 மணிக்கு நிலையை வந்தடைந்தது இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் காவல் துணைகண்காணிப்பாளர் எம். தமிழ்ச்செல்வன் தலைமையில் விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் மேற்பார்வையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் இளைஞர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல்அலுவலர் எஸ். ராமமூர்த்தி,உதவி ஆணையர் ம. ரமேஷ், மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, ஆய்வர் மெ. லட்சுமணன் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.