எங்கு, எப்போது, என்னென்ன பிரசாதம் கிடைக்கும்? சமூக வலைத்தளத்தைக் கலக்கும் டேட்டாபேஸ்!

சென்னையில் எந்தெந்தக் கோயில்களில் எந்தெந்த நாளில் பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிற தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
எங்கு, எப்போது, என்னென்ன பிரசாதம் கிடைக்கும்? சமூக வலைத்தளத்தைக் கலக்கும் டேட்டாபேஸ்!

பாய்ஸ் படத்தில் செந்தில் தனது உதவியாளரிடம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலில் பிரசாதம் வாங்கிவரச் சொல்வார். இறுதியில் அந்த உதவியாளர், இதுகுறித்து கேட்கும் போது என்னிடம் எந்தெந்த கோயிலில் எந்த நாளில் பிரசாதம் தரப்படுகிறது என்கிற கம்ப்ளீட் டேட்டாபேஸ் உண்டு. இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்பார்.

அதுபோல ஒரு டேட்டாபேஸ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கலக்கி வருகின்றது. சென்னையில் எந்தெந்தக் கோயில்களில் எந்தெந்த நாளில் பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிற தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

• மாமல்லபுரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் பொங்கல், வடை, சுண்டல், புளிசாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம் வழங்கப்படுகின்றது.

• அடையார் பத்மநாபசுவாமி கோயிலில் விழாக்காலங்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

• இச்சம்பாக்கத்தில் அமைந்துள்ள சாய் பாபா கோயிலில் பிரதி வியாழக்கிழமை மதியம் வேளையில் பலவித பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

• மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புளிசாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

• முகப்பேர் சாந்த பெருமாள் கோயிலில் சர்க்கரைப் பொங்கலும், புளிசாதமும் சிறப்பு.

• மைலாப்பூரில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோயிலில் மிளகு வடை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

• மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளிசாதமும் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

• மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுண்டல், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், தயிர் சாதம், பால் கோவா, பிஸ்கேட், சாக்லேட் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

• நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயிலில் மாலை வேளையில் புளி சாதம், வெண் பொங்கல், மிளகு வடை பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

• பெரம்பூர் ஐயப்பன் கோயிலில் வெண் பொங்கல் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

• போரூரில் உள்ள சாய்பாபா கோயிலில் வடை, வெண்பொங்கல், கேசரி ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வழங்கப்படுகிறது.

• புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு பிரதோஷ காலங்களிலும் வெண்பொங்கல், கேசரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

• புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புளிசாதம் பிரதி சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

• தி.நகர் குருத்வாரா (சிக்கியர் கோயிலில்) அளவற்ற சாப்பாடு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

• தி.நகர் வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் மத்திய கைலாஷ் கோயில்களில் விழாக்காலங்களில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது.

• திருவான்மியூர் சாய் பாபா கோயிலில் பிரதி வியாழக்கிழமைகளில் பலவித பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது.

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் மற்றும் வடபழனி முருகன் கோயில்களில் புளிசாதம் பிரசாதமாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com