திருப்பதியில் ஜூலை மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியல்

திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் உற்வசம் தான். அந்தவகையில், ஆண்டுதோறும் 450 உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பதியில் ஜூலை மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியல்
Published on
Updated on
1 min read

திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் உற்வசம் தான். அந்தவகையில், ஆண்டுதோறும் 450 உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானுக்கு உற்சவங்கள், உகந்த நாட்கள், ஆழ்வார் திருநட்சத்திரங்கள், சாத்துமுறை என நடைபெற்று வருகின்றது. அதன்படி, ஜூலை மாதம் ஏழுமலையானுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெற உள்ளது என்ற பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன் பட்டியல்:
ஜூலை 3 முதல் 14 வரை ஸ்ரீ ஜெயதீர்த்தரின் ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு நயயசுத்த பாராயணம்.

ஜூலை 4-ம் தேதி சாதுர்மாசிய விரதத்தை ஒட்டி சயன ஏகாதசி.

ஜூலை 7-ம் தேதி விகாசனசார்யா உற்சவம்.

ஜூலை 9-ம் தேதி குருபூர்ணிமா, பௌர்ணமி. கருடசேவை.

ஜூலை 11-ம் தேதி :கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்.

ஜூலை 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஸ்ரீ ஜெயதீர்த்தர் ஆராதனை மகோற்சவம்.

ஜூலை 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம்.

ஜூலை 26-ம் தேதி புரசைவாரி தோட்ட உற்சவம்.

ஜூலை 27-ம் தேதி நாக சதுர்த்தி.

ஜூலை 28-ம் தேதி கருட பஞ்சமி. கருட சேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com