தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி மே 31-ல் சிறப்பு யாகம்

தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி மே 31-ல் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.
தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி மே 31-ல் சிறப்பு யாகம்
Published on
Updated on
1 min read

தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி மே 31-ல் (நாளை) சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

சஷ்டி விரத மகிமை

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
 
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
 
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
 
குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம்

வேலூர் மாவட்டம வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி குழந்தை வேண்டி நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகத்துடன் சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் காப்பு நடைபெற்று தம்பதிகளுக்கு வெண்ணைய் பிரசாதத்துடன் தைல பிரசாதமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்க உள்ளார்.
 
தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை குமரனுக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளதால் தம்பதிகளுக்கு மேற்கண்ட தெய்வங்களின் அருள் கிடைத்து குழந்தை பாக்கியம் விரைவில் ஏற்பட சஷ்டி விரதத்துடன் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
 
சஷ்டி விரதம் இருந்து சந்தான கோபால யாகத்தில் கலந்து கொண்டு பிரசாதமாக வழங்கும் தைலத்தை தம்பதிகள் உண்டு, வயிற்றில் தடவி வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும் என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com