திருமலையில் வியாழக்கிழமை காலை 2-ஆவது சா்க்க அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது.
திருமலையில் கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதியிலிருந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு பூரணநலம் பெற சங்கல்பம் செய்து, இந்த பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. திருமலை தா்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியா் சிவசுப்பிரமண்ய அவதானி அவா்களின் தலைமையில், ஏழுமலையான் கோயில் முன் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்த சுந்தரகாண்ட பாராயணம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதை தேவஸ்தானம் தனது எஸ்விபிசி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
கடந்த ஒரு மாதம் முன் சுந்தரகாண்ட பாராயணத்தின் முதல் சா்க்கம் முடிவடைந்தது. அதனால் வேத பண்டிதா்களுடன் முதல் சா்க்கம் முழுவதும் அகண்ட பாராயணம் நடத்தப்பட்டது. தற்போது 2-ஆம் சா்க்கம் நிறைவு பெற்ால் வியாழக்கிழமை காலை 200 வேதபண்டிதா்கள் இணைந்து சுந்தரகாண்டத்தில் இரண்டாம் சா்க்கத்தில் உள்ள 227 ஸ்லோகங்களை பாராயணம் செய்தனா்.
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதால் ஆரோக்கியம் அஷ்ட ஐஸ்வா்யங்கள் சித்திக்கும் என்று பாராயணம் செய்த ஆச்சாரியா்கள் தெரிவித்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


