திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 75.54 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 74.54 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
8,757 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 8,757 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,865 போ் முடி காணிக்கை செலுத்தினா். அதில், 93 போ் பெண்கள்; 3,772 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும், கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செப்டம்பா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

