மகா சிவராத்திரியில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான்!!

மகா சிவராத்திரியன்று கோயிலுக்குச் செல்பவர்கள் இதைச் செய்யாதீர்கள்..
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி
Published on
Updated on
1 min read

சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரி விரதங்களிலும் சிறப்பானது எனப் புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் நாம் மற்ற சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் ஒவ்வொரு விநாடியும் சிவ சிந்தனையுடன் அன்றைய தினத்தை கழிக்க வேண்டும்.

பக்தர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!!

மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் அனைவரும் அன்றிரவு சிவபெருமானுக்கு நிகழும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு ஜாம பூஜையிலும், பல விதமான பழங்களும், பால், சந்தனம், தயிர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும். இறுதியாக தீபாராதனை நிறைவடைந்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகம் செய்யப்படும்.

சிவ பக்தர்கள் பலர் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும் பட்சத்தில் அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொள்வார்கள். அது தவறில்லை. ஆனாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு ஜாமத்தின்போது கொடுக்கப்படும் பிரசாதங்களை வீண் செய்வதும், பாதி சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதைத் தூக்கியெறிவதும் மிகப்பெரிய தவறாகும்.

கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை உண்டபின் அதன் இலைகளைக் கோயில் முழுவதும் பறக்கவிட்டு அசுத்தப்படுத்துவதும் மிகப்பெரிய பாவம்தான். நாம் கோயிலுக்குச் சென்று புண்ணியத்தைப் பெற வேண்டுமே தவிர நம்மை அறியாமலும் நாம் தவறு செய்தல் கூடாது.

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயங்கள். உணவு, நல்ல தூக்கம்.

இவ்விரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வைப் பரிபூரணமாகப் பெற முடியும். நினைத்த காரியம் சித்தியாகும்.

வைகுண்ட ஏகாதசி விரதத்துக்கும் இதே நோக்கம்தான். கூடுமானவரை உணவு எடுத்துக்கொள்ளாமல் உபவாசம் இருந்து பூஜித்தால் சிவபெருமானுக்கு அருகிலிருந்து பூஜை செய்த பலம் கிடைக்கும். முழுநாள் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்? மகா சிவராத்திரி அன்று பார்வதி தேவியே உணவு அருந்தாமல் இருக்கும்பொழுது நமக்கு எதற்காக உணவு?

சிவராத்திரியன்று "நம சிவாய" என்ற பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் உச்சரிப்பதை விட நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஓம் நமசிவாய..ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com