கோயிலுக்குச் செல்லும்போது பட்டாடை அணிவது என்பது பழங்காலந்தொட்டு பாரம்பரியமாக இருந்து வரும் மரபு. இதுநாள்வரை ஏன்? எதற்கு? என்று கேட்காமலே பல தலைமுறையினரும் அதனைப் பின்பற்றி வருகிறோம்.
பட்டுத் துணிக்கென சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்று தெரிந்திருந்தாலும் கோயிலுக்குச் செல்லும்போது பட்டாடை அணிவது ஏன், அவசியம் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.
கல்யாணம் முதல் காது குத்து வரை நம் வீட்டில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் பட்டு ஆடைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோம். ஏன் பட்டாடைகளைத் தேர்ந்தெடுக்கிறோம்? பட்டு அணிவது கட்டாயமா? அறிவியல்பூர்வமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பட்டு ஆடைகள்
கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்போன நம் இந்தியாவில் புடவை கலாசாரத்திற்கு என்று தனி இடம் உண்டு. எத்தனையோ ரகங்களில் புடவைகள் வந்திருந்தாலும், பெண்களிடையே இன்றும் மவுசு குறையாமல் இருப்பது பட்டுக்கு மட்டும்தான்.
நம் முன்னோர்கள் எந்தவொரு விஷயத்தையும் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள். பட்டு ஆடைகளை அணிவதால் நம் உடலில் உள்ள காந்த சக்தியானது அதிகம் வெளியேறாமல் நம்மைப் பாதுகாக்கும் கவசமாகத் திகழ்வதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் பல நாட்டுப் பெண்களும் அணிய விருப்பப்படும் பட்டுப் புடவையானது, பட்டுச் சேலையின் மென்மை தன்மை, பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை மேலும் கூட்டுகின்றது.
கோயிலுக்கு பட்டு அணிய வேண்டுமா?
கோயிலுக்குப் பட்டு அணிந்துச் செல்வதால் அங்கிருக்கும் நேர்மறையான இறை சக்தியை நாம் உள்வாங்க உதவுகிறது. எனவேதான், கோயிலுக்குச் செல்லும்போது அவசியம் பட்டு உடுத்த நம் வீட்டுப் பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும், பட்டாடை அணிந்து செல்வதால், எந்தவொரு தோஷமும் நம்மை அண்டுவதில்லை எனச் சொல்லப்படுகிறது.
நேர்மறை சக்தி
பட்டுப்புடவையின் மகிமை அறிந்ததால்தான், கோயிலில் இறைவனுக்கு, குறிப்பாக அம்மனுக்குப் பட்டினால் ஆன புடவையை உடுத்துகின்றனர். அம்மனுக்குச் சார்த்தப்படும் பட்டுப்புடவையில் நேர்மறை சக்திகள் அதிகம் படிந்திருக்கும், என்பதால் பட்டுப்புடவையை ஏலம் எடுப்பதற்கு பெண்கள் போட்டி போடுகிறார்கள்.
கோயில்களில் உள்ள நேர்மறை ஆற்றல்களைப் பட்டு ஆடைகள் கிரகித்து, உடலுக்குக் கடத்தும். அதனால் பட்டாடை உடுத்துபவர்களின் உடலும், மனமும் ஒருவகையான உற்சாக சக்தியைப் பெறும். இது அசல் பட்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். இதே சக்தி தங்கத்துக்கும் இருப்பதால், கோயிலுக்குச் செல்லும்போது தங்க நகைகளை அணிவதும் இதே பலனைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
புதுமண தம்பதிகள்
இல்லற வாழ்வில் இணையும் புதுமண தம்பதிகள் பட்டு ஆடைகளை உடுத்துவதன் மூலம் அவர்களுக்குள் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கும் என்பதால் திருமணத்திற்குப் பட்டு ஆடைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
கோயில் கருவறையில் மாங்கல்யம், தங்க நகைகள் போன்றவற்றை வைத்து எடுத்தால், இவை அங்குள்ள நேர்மறை ஆற்றலை ஈர்த்துக்கொள்ளும். எனவேதான் கோயிலுக்குச் செல்லும்போது பெண்கள் தங்க நகைகளை அணிந்து சென்றால் நன்மையைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
Wearing a silk saree to the temple is not a mandatory religious rule. However, in many Hindu traditions, wearing silk is considered a symbol of devotion and a matter of tradition.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறை: மத்திய அரசு மௌனம் ஏன்? - பரூக் அப்துல்லா

நலம் தரும் தண்டட்டி

சமூக ஊடகங்களில் அவதூறு அம்புகள்!

கொல்லூா் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றது எனது தனிப்பட்ட உரிமை - கேரள முதல்வா் விளக்கம்
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




