திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறாது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறாது: தேவஸ்தானம் அறிவிப்பு
Updated on
1 min read

திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
திருமலையில் எப்போதும், வைகானச ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) மட்டுமே விமரிசையாகக் கொண்டாடப்படும். 
வைகுண்ட ஏகாதசி, யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், வருடாந்திர தெப்போற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின்போது, ஏழுமலையான் கோயில், மாடவீதிகள், திருமலையில் உள்ள முக்கிய பகுதிகளில் மலர் அலங்காரம், மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்படும். 
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அதனால், அவர்களுக்காக சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். 
ஆனால், இம்முறை ஆந்திர மாநில அறநிலையத் துறை ஆங்கிலப் புத்தாண்டின்போது, கோயில்களில் எவ்வித சிறப்பு அலங்காரங்களும் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 
அதனால், திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறாது. வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com