திருவள்ளூரில் பொம்மியம்மன் சமேத முத்தீஸ்வரர் கோயிலில் அட்சய திருதியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நிகழ்ச்சியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களை அருள்பாலித்தார்.
அட்சய திருதியையையொட்டி, தங்கம் உள்பட பல்வேறு பொருள்களை வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பொம்மியம்மன் சமேத முத்தீஸ்வர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதேபோல், இக்கோயில் வளாகத்தில் அட்சய திருதியையை சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, நவதானியம், பால், தேன், நெய் மற்றும் தங்கம் ஆகியவை படையல் வைக்கப்பட்டன.
அதையடுத்து, மூலவர் முத்தீஸ்வரர், பொம்மியம்மனுக்கும் பால், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் பொம்மியம்மனுக்கு 500 புடவை சாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து முத்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த திரளான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



