திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்த உற்சவர்

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கிருத்திகை விழாவில், உற்சவர் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

News image

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளி மயில் வாகனத்தில் வலம் வந்த உற்சவர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:11 am IST

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கிருத்திகை விழாவில், உற்சவர் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, அதிகாலை மாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உற்சவர் முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். 
அதைத்தொடர்ந்து முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலைக்கோயிலில் மாட வீதிகளில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, முருகன் கோயில் தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
எலப்பாக்கம் பாலமுருகன் கோயிலில்...
 சித்திரை மாத கிருத்திகையையொட்டி, மதுராந்தகத்தை அடுத்த எலப்பாக்கம் சின்மய விநாயகர் மற்றும் பாலமுருகன் கோயிலில் புதன்கிழமை பால்காவடி பெருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேவற்கொடி ஏற்றல், காவடி பூஜை துவக்கல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால் குடங்களை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அலகு குத்திக் கொண்டு, காவடிகளை சுமந்து பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவையொட்டி, இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Story image

எலப்பாக்கம் பாலமுருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர். விழாவையொட்டி அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.