காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

திருப்பரங்குன்றம் ஜூன் 18-ல் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.  

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.  

ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவையொட்டி, கோயிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் விஷேச ஊஞ்சல் அமைக்கப்பட்டு, அதில் தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் எழுந்தருள்வார்.


அங்கு கோயில் ஓதுவார்கள் பொன்னூஞ்சல் பாடல் பாடுவர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.  விழாவின் 10-ம் நாளான வரும் 27-ம் தேதி முப்பழ பூஜை நடைபெறும். 

அன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால வேளையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாயகர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மாரிமுத்து, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.