ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 

பொதுவாக சித்தர் பீடம் சென்றால் பொதுப் பிரார்த்தனை வைக்கவும். அனைத்து சித்தர்களும்

News image
Updated On :12 ஜூன் 2018, 1:00 pm IST

 
பொதுவாக சித்தர் பீடம் சென்றால் பொதுப் பிரார்த்தனை வைக்கவும். அனைத்து சித்தர்களும் அருளை வாரி வாரி வழங்கவே காத்திருக்கின்றார்கள். நாம் தான் அவர்களிடம் சென்று ஏதேனும் மாய மந்திரம் போடுவார்களா? என்று தேடி வருகின்றோம். சித்தர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள். நம் பிரச்னை எப்போது தீரும் என்று நினைக்காது, அவர்களிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மெல்ல, மெல்ல நம் நிலை மாறுவதை நீங்கள் அனுபவத்தால் உணர முடியும். 
 
தங்கள் அருகில் உள்ள சித்தர் உயிர்நிலை கோயில்களுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் 7 வாரம் சென்று பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு வாருங்கள். முடியாதவர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உதாரணமாக நல்ல குரு கிடைத்து ஆன்மிக நாட்டம் பெற்றிட வியாழன் அன்று காலை பிரம்மமுகூர்த்தம் அல்லது மாலை 5 முதல் 7 மணி வரை. இதே போல் தொடர்ந்து 7 வாரம் அசைவம் தவிர்த்து வழிபட்டு வருதல் நலம். இதே போல் எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சித்தர்களை,ஜீவன் முக்தர்களை கைப் பிடியுங்கள், பின்னர் அவர்களே தங்களை விடாப் பிடியாக பிடித்துக் கொள்வார்கள். 
 
முதலில் நீங்கள் உங்கள் கையை, அவர்களின் கையோடு பிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் நம்மை பிடித்து விட்டால், அது தலைமுறை தோறும் தொடரும். நாம் பிடித்தால் கூட விட்டு விடுவோம். ஆனால் அவர்கள் பிடித்தால் நம்மை விடமாட்டார்கள். இது தான் சித்தர்களின் கருணை நிலை.
 
திருச்சி வரகனேரியில் பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோயில் உள்ளது, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015-ம் ஆண்டில் திருப்பணிகள் நிறைவு பெற்று, குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதனை நாம், நம்மை வரவேற்கும் திருக்கோயிலின் கோபுரம் பார்த்தே அறிய முடிகின்றது. 
 
உள்ளே சென்றதும் விநாயகரை வணங்கி வழிபட்டு , நம் ஐயாவின் அருள் பெற நேரே செல்லலாம்

Story image


அருகிலேயே ஐயாவின் அருள்நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
 

Story image


மேலே காணும் காட்சியில் ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகளின் திருமுகம் ஒளி வெள்ளத்தால் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. இதைப் பார்ப்பவர்கள் உடல் ஒரு கணம் சிலிர்க்கும். அந்த இடமே கருணை மழையில் நனைந்து கொண்டிருந்தது. குருவின் கால் பட்ட இடம் தான் கைலாயம். இங்கு மனம் நுண்ணிய அதிர்விற்குசெல்கின்றது. மனக்கசடுகள், மன அழுக்குகள் நீங்குவதை இங்கே கால் வைய்த உடனே உணரலாம்.

Story image
Story image
Story image
Story image

அப்படியே கோயில் வலம் வரும்போது விநாயகர் அகவல் படிக்கலாம். பின் தில்லையின் கூத்தனையும், அகிலம் ஆளும் அன்னையையும் தரிசிக்கலாம்.    
ஆலய வளாகத்தில்,  வள்ளலார் தரிசனம், நால்வர் அருள்நிலை, திருமுறை வழிபாடு காணலாம்.
 

Story image
Story image

பிர்மரிஷி குழுமியானந்த சுவாமிகளின்  மடாலயத்தில் மாதாந்திர திருவோணம், மாதாந்திர பூசம், அமாவாசை ஆகிய  நாட்களில் பகல் 12 மணி அளவில் வழிபாடு நடைபெற்று சுமார் 700 பேர் முதல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
 
இந்த அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 
 
கோவில் காலை 06.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் 08.00 மணிவரையும் திறந்திருக்கும். காலை  06.30 மணி, காலை 10.30 மணி, மாலை  06.30 மணி, இரவு 08.00 மணி என நான்கு கால பூசைகள் இங்கே செய்யப்பட்டு வருகின்றது.
 
மாதாந்திர திருவோணம்,  மாதாந்திர பூசம்,  மாதாந்திர அமாவாசை, திருக்கார்த்திகை,  பிரதோஷம், மாதாந்திர பௌர்ணமி,  சங்கட ஹர சதுர்த்தி ஆகிய நாட்களில்  சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுசமயம் ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகளின் வார வழிபாட்டு குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. 
 

Story image

சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த நாளான தமிழ் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று மகா குருபூஜை வருடா வருடம் மிக சிறப்பாக 3 நாட்கள் விழாவாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பொதுமக்களுக்கு அன்னதானமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.  சுவாமிகளின் 118-வது குருபூசை விழா 4/6/2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. திரளான அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற்றார்கள்.

மேற்படி விழாவானது மூன்று நாட்கள் களை கட்டியது. 4/6/2018 , 5/6/2018, 6//6/2018 என மூன்று நாட்களும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .  ஏன் மூன்று நாட்களும் இன்னிசை நிகழ்ச்சி என்றால் சுவாமிகளிடம் வந்து பிரார்த்தனை செய்தால் நல்ல குரல் வளம் பெற்று பாடகர்களான வருவார்கள் என்பது உறுதி. தியாகராஜ பாகவதர் போன்ற பாடகர்கள் இங்கு வந்து சுவாமிகளின் அருள் பெற்ற பின்னரே, கலைத்துறையில் உச்சம் தொட்டார்கள் என்பது செவி வழி செய்தி ஆகும்.

வாய்ப்புள்ள அன்பர்கள் திருச்சியிலுள்ள ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகளின் ஆலயத்திற்குச் சென்று குருவருள் பெறுக. அருகிலேயே ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசனம் பெற்று வரலாம்.
 
தொடர்புக்கு

குழுமிகரை, வரகனேரி,

(பொன்னையா மேல்நிலைப் பள்ளி அருகில்)

திருச்சிராப்பள்ளி 620 008, தமிழ்நாடு
 
Ph: 0431-34268547  
E.Mail : kulumiananthaswamy@gmail.com

-ராகேஸ் TUT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.