சிறகுகள் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான ’சிறகுகள்’ தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தத் தொடரில், ஜோவிதாவுக்கு ஜோடியாக ஆனந்த ராகம் தொடர் நாயகன் அழகப்பன் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில், ஆனந்த் பாபு, வினோதினி, அரவிந்த், ஜீவா ரவி, ராஜேஸ்வரி, உதய், பரத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
நாயகி தொடரில் நடித்து கவனம் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் வெற்றிவேல் ஜோடி, சிறகுகள் தொடரிலும் இணையாக நடிக்கிறார்கள். இவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவியாக நாயகி தொடரில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், மீண்டுகள் இவர்கள் சிறகுகள் தொடரில் ஜோடியாக நடிக்கவுள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வளர்ப்புத் தாயிடம் நாயகி(ஜோவிதா) துன்பங்களை அனுபவிக்கிறார். இதனைக் கண்ட நாயகன்(அழகப்பன்) எவ்வாறு நாயகியை மீட்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சிறகுகள் தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The broadcast date for the Siragugal series has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











