நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகக் கருதப்படும் அஸ்வினி மேஷ ராசியிலும், மகம் நட்சத்திரம் சிம்ம ராசியிலும், மூலம் நட்சத்திரம் தனுசு ராசியிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய பரிகாரமாக ஜோதிட ரீதியாகக் கணித்து வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி வாழ்வில் நலன்கள் பல பெறுவோமாக...வாங்க பரிகாரத்தைப் பார்ப்போம்.
இந்த நட்சத்திரக்காரர்கள் சற்று ஆதிக்க குணம் நிறைந்தவர்கள். எடுத்த காரியத்தை எப்பேர்பட்டாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் படபடப்பு காட்டக்கூடாது. நிதானத்துடன் எந்த ஒரு செயலையும், பொறுமையுடன் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
பரிகாரமாக இவர்கள் தினமும் 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும்...அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குவார்கள். ஏன்? இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் தியானம் செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம்.
ஏனெனில், இந்த நட்சத்திரக்காரர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கேதுவின் அதிதேவதை கணபதி. கணபதியின் உருவம் யோகத்தைக் கொடுக்கக் கூடியது. எனவே யோகா - தியானம் செய்வது நன்மையைத் தரும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இது வாழ்நாள் பரிகாரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஜிஷா விஜயன் பிறந்த நாள்: சர்தார் 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து!

லமின் யமாலிடம் மீண்டும் தோற்ற எம்பாபே! | FIFA | FIFA World Cup 2026 | Lamine Yamal | Kylian Mbappé |

கேரள அரசின் ஆபரேஷன் டூஃபான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பு?







