தாமிரவருணியில் நாளை தொடங்குகிறது மகா புஷ்கர விழா!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் மகாபுஷ்கர விழா நாளை..


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் மகாபுஷ்கர விழா நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கர விழாவாகும் இது.
இம்முறை குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று பிரவேசிப்பதால் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும். அதனால் குரு பெயர்ச்சிக்குப் பிறகு வரும் அக்டோபர் 12 முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது.
இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும்.
12.10.2018 (வெள்ளி) - விருச்சிகம்
13.10.2018 (சனி) - தனுசு
14.10.2018 (ஞாயிறு) - மகரம்
15.10.2018 (திங்கள்) - கும்பம்
16.10.2018 (செவ்வாய்) - மீனம்
17.10.2018 (புதன்) - மேஷம்
18.10.2018 (வியாழன்) - ரிஷபம்
19.10.2018 (வெள்ளி) - மிதுனம்
20.10.2018 (சனி) - கடகம்
21.10.2018 (ஞாயிறு) - சிம்மம்
22.10.2018 (திங்கள்) - கன்னி
23.10.2018 (செவ்வாய்) - துலாம்
இந்த விழாவானது நாளை பாபநாசம் படித்துறையில் துவங்கி, கடலில் கலக்கும் புன்னகாயல் வரை உள்ள 149 முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நீராடவும், வழிபாடு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நாளை காலை 11.45 மணிக்கு பாபநாசம் படித்துறையில் துவங்கும் மகா புஷ்கர நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, புஷ்கர விழாவைத் துவக்கி வைக்கிறார்.
இதில், இந்து அமைப்பினர் மடாதிபதிகள், பக்தர்கள், வடமாநிலங்களைச் சேர்ந்த மதகுருக்கள், சாமியார்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...