
தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-வின் உறுப்பினர் பதவியை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். மேற்கண்ட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு திருமலையில் ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க ஆந்திர அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா சட்டப் பேரவையைக் கலைக்குமாறு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ், ஆளுநரிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார். இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தெலங்கானா சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடவீரய்யாவின் பதவியை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக, கடந்த 2003ஆம் ஆண்டு ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டப் பேரவையைக் கலைக்க முடிவெடுத்தபோது தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த சலபதி ராவின் பதவி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






