
திருப்பதி மலைப்பாதையில் தேவஸ்தானம் சார்பில் ஏற்படுத்தியுள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருமலைக்குச் செல்லும் 2-ஆவது மலைப்பாதையின் தொடக்கத்தில் தேவஸ்தானம் விநாயகர் கோயிலை ஏற்படுத்தி உள்ளது. மலையில் ஏறும் அனைவரும் இந்த விநாயகரை வணங்கிச் செல்வது வழக்கம். இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, வியாழக்கிழமை தேவஸ்தானம் சிறப்பு பூஜைகளை செய்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் மரம் நடுவது குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் சிலர் ஒரு மரத்தில் விநாயகர் உருவத்தை அலங்காரத்துடன் ஏற்படுத்தினர். அதன் அருகில், 'நான் கல்லில் இல்லை, நான் கோயிலில் இல்லை.
நான் மரத்தில் இருக்கிறேன். அதனால் உங்களின் உன்னதமான வாழ்வுக்காக மரம் நடுங்கள்' என்ற வாசகத்தை வைத்துள்ளனர். மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் மரத்தில் ஏற்படுத்திய விநாயகரை கண்டு வணங்கிச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








