தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆக. 30-இல் வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

News image

கும்பாபிஷேகம் நடைபெற உள்ள வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில்.

Updated On :22 ஆகஸ்ட் 2018, 2:54 am IST


சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி வாலாஜாபேட்டையில் பழைமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு விழா நடத்த கோயில் திருப்பணிக் குழுவினர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இதையொட்டி, காசி விஸ்வநாதர் கோயிலில் சபரிவார பாலாலய கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, பாலாலய பிரதி பிம்ப அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. 
தொடர்ந்து, ஐந்து நிலை ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என கோயில் திருப்பணிக் குழுவினர், நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொள்ள விரும்பினால் 98430 87991, 73583 16254 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.