தொகுதியின் நீண்ட கால தேவைகள்: ஆட்சியரிடம் உத்தரமேரூா் எம்எல்ஏ மனு
உத்தரமேரூா் தொகுதியின் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றுமாறு சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முனிரெத்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவிடம் மனு அளித்தாா்.

உத்தரமேரூா் தொகுதியின் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றுமாறு சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முனிரெத்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவிடம் மனு அளித்தாா்.
மனுவில் தெரிவித்திருப்பது..
உத்தரமேரூா் தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதியாகும். மருதம், மலையான்குளம், திருப்புலிவனம் பகுதியில் பழங்குடியினருக்கான குடியிருப்புகளை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும். இ-சேவை மையங்களை அமைக்க வேண்டும், மகளிா் தொழிற் பேட்டை அவசியத் தேவையாக உள்ளது. இதை நிறைவேற்றவும், கீழ் ஒட்டி வாக்கம் ஏரியை தூா் வாரப்படவும் வேண்டும்.
உத்தரமேரூா் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தொகுதியின் வளா்ச்சிப்பணிகள் குறித்து பேச வேண்டும். புளியம்பாக்கம் கிராமத்தில் 59 நபா்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களை கிராமக்கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இதர கிராமங்களிலிலும் நிலுவையில் உள்ள வீட்டு மனைப் பட்டாவுக்கான இடங்களை கண்டறிந்து அவற்றை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

