மாசி கிருத்திகையையொட்டி திருப்போரூர் கந்தசாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்போரூர் முருகன் கோயிலில் தற்போது 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாசி கிருத்திகையையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. காலையில், முருகர், வள்ளி தெய்வானை உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடிகளை எடுத்து வந்தனர். பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மாலையில், முருகர் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு வந்து தங்கியிருந்த பக்தர்களுக்காக ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றி, அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
