இன்று சிவன் கோயிலுக்குச் செல்பவர்கள் இதைப் பார்க்க மறக்காதீங்க! 

சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி என வருடம் முழுவதும்..
இன்று சிவன் கோயிலுக்குச் செல்பவர்கள் இதைப் பார்க்க மறக்காதீங்க! 
Updated on
1 min read

சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி என வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் அனைத்து சிவராத்திரிகளிலும் சிறப்பானது எனப் புராணங்கள் கூறுகின்றன.

நாகாபரணம் (நாகம் + ஆபரணம்) என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்யப் பயன்படும் ஆபரணங்களில் ஒன்றாகும்.

சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகளில் மற்றும் திருவிழா காலங்களில் மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி ஐந்து தலை நாகம் படம் எடுப்பதைப் போன்ற தோற்றத்தில் நாகாபரணம் அணிவிக்கப்படுகிறது. 

கடுமையான சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் நாகாபரணம் சார்த்திய சிவனை வழிபட்டால் அதீத பலன்கள் கிடைக்கும் என்பது திண்ணம்.

சென்னை மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் மார்கெட் அருகில் பூங்காவில் இருக்கும் மாரியம்மன் கோயிலில் சன்னிதி கொண்டிருக்கும் உமா மகேசுவர லிங்கத்திருமேனிக்கு புதியதாகச் செய்யப்பட்ட நாகாபரணம் இன்று அணிவிக்கப்பட உள்ளது.

இன்று உத்தமமோத்த சோமவார சிவராத்திரி நன்னாளில் ஆலயங்களில் நாகாபரணத்துடன் பக்தர்கள் ஈசுவரனைத் தரிசிக்கலாம்.

தகவல் - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com