/

ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் தங்கக் கொடிமரம் பிரதிஷ்டை

ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில், கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. 

News image

ஈரோடு ஈஸ்வரன் கோவில்

Updated On :6 நவம்பர் 2020, 10:14 am

ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில், கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. 

இந்த இரு கோவில்களின் கொடிமரம் பழுதானதால் இந்தக் கொடி மரங்களுக்குப் பதிலாகப் புதிதாக மாற்றுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பில் இரண்டு தங்கக் கொடிமரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி கடந்த 6 மாதமாக நடந்து வந்தது. 

Story image

இந்த பணி போது நிறைவடைந்ததை ஒட்டி இன்று ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் புதிய தங்கக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி கோட்டை பெருமாள் கோவிலில் தங்கக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.