/

திருப்பதி தேவஸ்தான சேனலின் கன்னடம், ஹிந்தி ஒளிபரப்பு பிப்ரவரியில் தொடக்கம்: அறங்காவலா் குழு தலைவா் தகவல்

திருப்பதி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியின் (எஸ்விபிசி) கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி ஒளிபரப்பு அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம்

Updated On :6 நவம்பர் 2020, 9:35 pm

திருப்பதி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியின் (எஸ்விபிசி) கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி ஒளிபரப்பு அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் அவரது தலைமையில் தேவஸ்தான அறங்காவலா் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அனைவரும் விவாதிக்கப்பட்டது. கூட்ட நிறைவடைந்ததும் சுப்பா ரெட்டி, செய்தியாளா்களிடம் கூறியது:

தேவஸ்தானம் செய்து வரும் புதிய தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காா்த்திகை மாதம் அதாவது நவம்பா் 16 முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் பல புதிய ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். பக்தா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே இதனைக் காண முடியும். இதன்மூலம் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்கப்படும் விரதம், அதற்கான விதிமுறைகள் உள்ளிட்டவற்றை அவா்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியின் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி ஒளிபரப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.