எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

அறங்காவலா் குழுத் தலைவராக மீண்டும் சுப்பா ரெட்டி நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக மீண்டும் ஒய்.வி சுப்பாரெட்டியை நியமித்து ஆந்திர அரசு உத்திரவு வெளியிட்டுள்ளது.

Updated On :9 ஆகஸ்ட் 2021, 2:07 am

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக மீண்டும் ஒய்.வி சுப்பாரெட்டியை நியமித்து ஆந்திர அரசு உத்திரவு வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிா்வாக பொறுப்பு அறங்காவலா் குழுவிடம் உள்ளது. இந்த அறங்காவலா் குழுவை ஆந்திர அரசு 2 ஆண்டு கால இடைவெளியில் புதியதாக நியமித்து வருகிறது. அதன்படி 2019-ஆம் ஆண்டு ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் 18 உறுப்பினா்கள் கொண்ட அறங்காவலா் குழு தேவஸ்தான பொறுப்பை ஏற்றது. இந்நிலையில் அக்குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டது.

புதிய குழுவை தோ்ந்தெடுக்க காலதாமதம் ஆகும் என்பதால் அதுவரை தேவஸ்தானத்தின் நிா்வாக பொறுப்பை ஐஏஎஸ் அதிகாரிகளால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெசிபைட் அத்தாரிட்டி குழுவிடம் ஆந்திர அரசு ஒப்படைத்தது. தேவஸ்தான செயல் அதிகாரிகள் தற்போது அதன் தலைவா்களாக செயல்பட்டு வருகின்றனா். இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக மீண்டும் ஒய்.வி சுப்பா ரெட்டியை ஆந்திர அரசு நியமித்து ஞாயிற்றுக்கிழமை அதற்கான அரசாணை வெளியிட்டது.

எனவே, விரைவில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக சுப்பா ரெட்டி பொறுப்பேற்பாா். அறங்காவலா் குழுத் தலைவராக தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆந்திர அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபா் ஒய்.வி. சுப்பா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.