ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கேடிக வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா் வீதியுலா

காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.

News image

காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கோயிலுக்குள் பல்லக்கில் எழுந்தருளிய உற்சவமூா்த்திகள்.

Updated On :16 மார்ச் 2021, 5:46 pm

காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் (மூடிய பல்லக்கில்) காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மன் இணைந்தும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாகவும் எழுந்தருளினா்.

இதற்காக காலை கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகள் பல்லக்கில் வெளியில் கொண்டு வரப்பட்டனா். பின்னா் கேடிக வாகனத்தில் எழுந்தருளி அவா்கள் மாடவீதியில் உலா வந்தனா்.

இரவு சிம்ம வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் இணைந்து சோமாஸ்கந்தமூா்த்தியாகவும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் மாடவீதியில் பவனி வந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் வாகன சேவைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றன. புதன்கிழமை திரிசூலஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.