சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 5 நாள்களுக்குத் தடை!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 8 -ஆம் தேதி பௌா்ணமியை முன்னிட்டு, நவ. 5 -ஆம் தேதி முதல் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால், ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, வருகிற 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை 5 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என வனத் துறையினா் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com