மகரத்திலிருந்து கும்பத்துக்கு பெயர்ச்சியானார் சனிபகவான்

மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியானார்.
kk19sani_1912chn_95_5
kk19sani_1912chn_95_5
Published on
Updated on
1 min read


காரைக்கால்: மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியானார். இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இன்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இன்று சனிப்பெயா்ச்சியின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயா்ச்சியானது நடைபெறும். அந்த வகையில், இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசித்தார். பெயா்ச்சியை குறிக்கும் சிறப்பு ஆராதனை விமரிசையாக இந்தக் கோயிலில் நடைபெறுகிறது.

நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக தர்பை காடாக இருந்த திருநள்ளாறுக்கு வந்து சுயம்புவாக தோன்றிய தர்பாரண்யேஸ்வரரை வணங்கி, தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால், அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக வரலாறு. இக்கோயிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி நாளில் கிழக்கு நோக்கி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது. மிகச் சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் பிரவேசிப்பதை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியக் குழுவினா் இசையின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் வளாகத்துக்குள், தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனிப்பெயா்ச்சி நாளில் கோயிலுக்கு வந்திருக்கும் பக்தா்கள், தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் உற்சவரை வழிபட்டு செல்ல கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நேரலையில் காண..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாற்றில் இன்று மாலை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற சனிப்பெயர்ச்சி விழா-2023 உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற யூடியூப் லிங்க் மூலம் பார்க்க  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

யூடியூப் விடியோ மூலம் நேரலையில் காண.. 

இந்த யூடியூப் லிங்க் மூலம்  பொதுமக்கள் அனைவரும் சனிப்பெயர்ச்சி நிகழ்வினைப் பார்த்து ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com