அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இவர்களுக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரம் யாருக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சுக்கலாம்.
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும்: வாரப் பலன்கள்
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும்: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.23 - பிப்.29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மன வளம் இரண்டும் சீராகவே இருக்கும்.

உறவினர்கள் இல்லத்துக்கு வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவுக்கு தடையிருக்காது. வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் முழுவேகத்துடன் இருப்பீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு நுணுக்கங்களைக் கற்றுத் தருவீர்கள். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 2, 3, 4.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சுய முயற்சி, புத்திசாலித்தனத்தால் கடினமான காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தெய்வ பலம் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பேச்சில் பொறுப்புடன் இருப்பீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நாட்டம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 5, 6.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். புதிய வாகனங்களை வாங்குவார்கள். நெடுநாளைய எண்ணம் நிறைவேறும். பெரியோரின் ஆலோசனையைக் கேட்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் உருவாகும். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகள் நீங்கும். விவசாயிகளுக்கு கொள்

முதலில் அதிக லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சிப் பணியை சுறுசுறுப்பாகச் செய்வார்கள். கலைத் துறையினரின் வருவாய் உயரும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம்} மார்ச் 7.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பயணங்களால் நன்மை உண்டாகும். யோகா, பிராணாயாமத்தைக் கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறிது பணிச்சுமை கூடும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு உறுதுணையாக இருக்கும். விவசாயிகளுக்கு சிறிது செலவு உண்டாகும்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்து கூட செய்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைச் செய்வீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கடன் வாங்கி புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

உறவினர்களால் நன்மை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின்ஆதரவைத் தக்க வைப்பீர்கள். கலைத் துறையினர் துறையில் சீராகப் பணிபுரிவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள், மாணவர்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நல்லவர்களின் தொடர்பால் நன்மை அடைவீர்கள். பயணங்களால் பலன் உண்டாகும். தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள்.

பிறரை அரவணைத்துச் செல்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவார்கள். வியாபாரிகள் சேமிப்புகளைக் கூட்டுவார்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் பொறுப்பு அதிகரிக்கும். கலைத் துறையினர் கடினமாக உழைப்பீர்கள்.

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் நிம்மதி நிறையும். நெடுநாள் ஒதுக்கியிருந்த காரியங்களை நடத்துவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய வீடுகளுக்கு சிலர் மாறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிகளைப் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகள் நீங்கும்.

விவசாயிகள் குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். அரசியல்வாதிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

பெண்கள் கோபத்தைக் குறைத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வீட்டிலும் வெளியிலும் அந்தஸ்து உயரும். உங்கள் கீழ் பணிபுரிவோர் பேச்சை தட்ட மாட்டார்கள். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்றுசேர்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சகஜமாகப் பழகுவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத் துறையினர் மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சை கேட்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

காரியங்களை நல்ல முறையில் தொடங்குவீர்கள். தேவையான அளவில் பொருளாதாரம் இருக்கும். குடும்பத்தினை அரவணைத்துச் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகள் நீராதாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் பாராமுகத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். கலைத் துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும்.

பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் சிறிது தாமதமாகவே நடக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் உண்டு. வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.

பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். பிறருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள்.

எதிர்ப்புகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை பிறர் உதவியின்றி செய்வீர்கள். வியாபாரிகள் சுமாரான லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையினர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். பிறருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை பிறர் உதவியின்றி செய்வீர்கள். வியாபாரிகள் சுமாரான லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையினர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com