பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

News image
Updated On :15 மே 2024, 11:12 am

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ளது.

கல்வெட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த கல்வெட்டுகளில், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டுகளில் தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்து, செடி கொடிகளால் சேதாரமாகி இருந்தன.

இக்கல்வெட்டுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் இன்று(மே. 15) வருவாய்த்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் மீட்டெடுத்து, அந்த கல்வெட்டுகளை பாதுகாப்பாக நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைத்துள்ளனர்.இக்கல்வெட்டுகள் வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகள் 2011 -ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.