மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்!
சொர்க்கவாசல் திறப்பு பற்றி..


பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு "கோவிந்தா"எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் திருஅத்யனம் உற்சவம் எனும் பகல் பத்து, ராப்பத்து கடந்த 31-ம் தேதி துவங்கிய நிலையில், இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று அதிகாலை 05.15 மணிக்கு மேல் 06.15 மணிக்குள் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கிட தனது தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வெளியே வந்து "கோவிந்தா" எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...