பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

கும்பாபிஷேக விழா.. கெங்கவல்லி பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு..
Published on

கெங்கவல்லியில் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலில் கணபதி ஐயப்பன் துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. பழமையான இக்கோயிலில் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த ஒன்றாம் தேதி முகூர்த்த நாள் நடப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து இன்று யாகசாலையில் யாக கால பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களில் கொண்டு வந்த நதிகளில் இருந்து வரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com