/

ஆடித் திருவிழா: குச்சனூரில் குவிந்த பக்தா்கள்!

ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனர்.

News image

குச்சனூர் சனீஸ்வர பகவான் - file photo

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

தேனி மாவட்டம், குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் வாரம் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான  பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்யக் குவிந்தனர்.

Story image

குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் 5 வார ஆடித் திருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கும் - நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றது.

அதைத்தொடர்ந்து. தற்போது மூன்றாம் வாரத் திருவிழாவை முன்னிட்டு சனீஸ்வரரை  சுவாமி தரிசனம் செய்ய தேனி, மதுரை, சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Story image

Thousands of devotees flocked to the Arulmigu Saneeswara Bhagavan Temple in Kuchanur, Theni district, to offer prayers on the third Saturday of the month, coinciding with the Aadi festival.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.